சென்னை,
சென்னை எழும்பூர் - மேற்கு வங்காள மாநில ஹவுரா அருகே உள்ள சந்திரகாச்சி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னை எழும்பூரில் இருந்து 17-ந் தேதி, (சனிக்கிழமை) இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06031) மூன்றாவது நாள் காலை 7.45 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து 19-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06032), அடுத்த நாள் இரவு 7 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரெயிலில் 10 தூங்கும் வசதி பெட்டிகளும், 8 இரண்டாவது வகுப்பு பெட்டிகளும் இணைக்கப்பட்டிருக்கும். இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.