தமிழக செய்திகள்

ஆயுத பூஜை: மெட்ரோ ரெயில்கள் இரு நாட்களுக்கு ஞாயிறு அட்டவணைப்படி இயக்கம்

மெட்ரோ ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

ஆயுத பூஜை நாளை கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் விஜயதசமி கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு 2 நாட்களுக்கு அரசு விடுமுறை தினம் என்பதால், மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அட்டவணை

இந்த நிலையில், ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு இரு நாட்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது;

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்களான திங்கட்கிழமை (19-10-2026) மற்றும் செவ்வாய்க்கிழமை (20-10-2026) ஆகிய நாட்களில் மெட்ரோ ரெயில்கள் ஞாயிறு கால அட்டவணைப்படி இயக்கப்படும்.

பச்சை, நீல வழித்தடங்கள்:

காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் சேவை பின்வரும் நேர இடைவெளிகளில் இயக்கப்படும்.

* காலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

* நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை 7 நிமிட இடைவெளில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

* இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

மஞ்சள் வழித்தடம்:

காலை 07:00 மணி முதல் இரவு 9 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

பயணிகள் அதற்கேற்ப தங்களது பயணங்களைத் திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT