தமிழக செய்திகள்

அய்யா வைகுண்டசுவாமி பிறந்தநாள்; மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை: தூத்துக்குடி கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக மார்ச் 14ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி மாவட்டம், அய்யா வைகுண்டசுவாமி 194வது பிறந்தநாள் விழா மாசி மாதம் 20-ம் தேதி (4.3.2026) அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு 4.3.2026, புதன்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசிய பணிகள்/ பணியாளர்களுக்கு இந்த விடுப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.

இது செலாவணி முறிச் சட்டத்தின்படி (Negotiable Instruments Act 1881) பொது விடுமுறை நாளல்ல எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.3.2026 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.