திருவனந்தபுரம்,
கேரளம் மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் தண்ணித்தோடு மேக்கானத்தில் உள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் 20 அடி ஆழ கிணறு உள்ளது. அந்த கிணற்றில் தண்ணீர் கிடையாது.
நேற்று அதிகாலையில் காட்டு பகுதியில் இருந்து ரப்பர் தோட்டத்திற்குள் புகுந்த 2 வயது குட்டி யானை அந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தது.
தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் ஒரு பக்கம் கிணற்றை சமப்படுத்தி, குட்டி யானை வெளியே வருவதற்கு ஒரு பாதையை ஏற்படுத்தினர். 3 மணி நேரத்துக்கு பின்னர் அந்த பாதை வழியாக குட்டி யானை வெளியேறி, காட்டுப்பகுதியை நோக்கி ஓடியது.