மதுரை,
இஸ்லாமிய மதத்தினரான புனித பண்டிகையான பக்ரீத் வரும் 28ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. அதேபோல், இந்த வாரம் வியாழன், வெள்ளி கிழமைகளில் (28,29ம் தேதிகள்) சுப முகூர்த்த தினங்கள் வருகின்றன. திருமணம் உள்பட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த தினங்களில் நடைபெற உள்ளன. மேலும், கோவில்களில் வைகாசி திருவிழாக்களும் நடைபெற உள்ளன.
இந்நிலையில், பக்ரீத் பண்டிகை, சுப முகூர்த்த தினங்கள், கோவில் திருவிழாக்கள் வர உள்ள நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஆட்டுச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
வாடிப்பட்டி ஆட்டுச்சந்தையில் இன்று காலை ஆடுகள் விற்பனை தொடங்கிய சில மணிநேரங்களிலேயே வியாபாரிகள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கிச்சென்றனர். அதன்படி, இன்று மட்டும் ரூ. 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.