தமிழக செய்திகள்

சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக பெங்களூரு - கன்னூர் இடையே இன்று பக்ரீத் சிறப்பு ரெயில்

பக்ரீத் பண்டிகையையொட்டி முன்னிட்டு தெற்கு ரெயில்வே சிறப்பு ரெயில்களை அறிவித்துள்ளது.

சென்னை,

பக்ரீத் பண்டிகையையொட்டி, பெங்களூரு - கேரள மாநிலம் கன்னூர் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

இது தொடர்பாக, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சி.எம்.வி.டி. பெங்களூரு - கன்னூர்

சி.எம்.வி.டி. பெங்களூருவில் இருந்து இன்று (26-ந் தேதி) இரவு 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 06545) நாளை மதியம் 2 மணிக்கு கன்னூர் ரெயில் நிலையத்தை சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், கன்னூரில் இருந்து நாளை (27-ந் தேதி) மாலை 6.25 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06546) மறுநாள் காலை 9 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

பெங்களூரு கன்டோன்மென்ட் - கன்னூர்

இதேபோல், பெங்களூரு கண்டோன்மென்டில் இருந்து நாளை (27-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06549) மறுநாள் காலை 7.50 மணிக்கு கன்னூர் ரெயில் நிலையத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் கன்னூரில் இருந்து 28-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06550) அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு பெங்களூரு கண்டோன்மென்டை சென்றடையும்.

சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக...

இந்த சிறப்பு ரெயில்கள், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போதனூர், பாலக்காடு, சோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலசேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (26-ந் தேதி) மதியம் 2.15 மணிக்கு தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.