தமிழக செய்திகள்

சதுரகிரி மலைக்கு நாளை பக்தர்கள் செல்ல தடை... ஆடி அமாவாசைக்கு அனுமதி கிடைக்குமா?

சதுரகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து காட்டுத் தீ பரவி வருகிறது.

விருதுநகர்,

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் நாளை (ஆக. 11) செல்வதற்கு தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

ஆடி அமாவாசை

சதுரகிரி கோவில் பகுதியில் தொடர்ந்து காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை மலையேற வனத்துறை தடை விதித்துள்ளது.

காட்டுத் தீயின் தன்மையை பொறுத்து, ஆடி அமாவாசை தினத்தன்று பக்தர்களை மலையேற அனுமதிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.