காலாண்டு விடுமுறை 
தமிழக செய்திகள்

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு செப். 26 முதல் அக். 4 வரை காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 16 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெற்று வருகின்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து வகை பள்ளிகளுக்கும் செப்டம்பர் 26 ஆம் தேதி முதல் அக்டோபர் 4 ந் தேதி வரை காலண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் மாணவர்கள் வினா தாட்களுக்கான விடைகளை எழுதி(Assignment) வரவும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாடமாக படிக்கும் வகையில் பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டுமென அறிவுறத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

தடையை மீறி வகுப்புகள் நடத்தப்பட்டு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் தலைமை ஆசிரியரே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுமுறையின்போது மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்லவும் அனுமதி இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலாண்டுத் தேர்வு விடுமுறையில், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவது உண்டு. இந்நிலையில் தான் இந்த உத்தரவு பள்ளிக்கல்வித்துறை சார்பில் பிறக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதிய மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், அரசு பள்ளிகளில் இந்த உத்தரவு பின்பற்றப்படுகிறது.

SCROLL FOR NEXT