தமிழக செய்திகள்

சட்ட விரோத மணல் குவாரிகள் செயல்பட தடை - ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி

இனியும் கண்களை மூடி வேடிக்கை பார்க்க முடியாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வு தெரிவித்துள்ளது.

மதுரை,

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்ட விரோத மணல் குவாரிகள் செயல்பட தடை விதித்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீதிபதிகள் எச்சரிக்கை

இதுதொடர்பாக இன்று நடந் த வழக்கு விசாரணையின்போது இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை இனியும் கண்களை மூடி வேடிக்கை பார்க்க முடியாது என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.

மேலும் சட்ட விரோத குவாரிகள் செயல்பாட்டுக்கு உடனடியாக மாவட்ட கலெக்டர் தடை விதித்து நடைவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் சட்ட விரோத மணல் குவாரிகள் நடைபெறுவதை தடுக்கக்கோரிய வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.