தமிழக செய்திகள்

திருச்செந்தூரில் ஆன்மிக நிகழ்ச்சிகளில் தனிநபர் துதிபாட தடை: கோவில் நிர்வாகம் அதிரடி

திருச்செந்தூரில் கடந்த 15-ந் தேதி சூரசம்ஹாரம் நடந்தது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 15-ந் தேதி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி, வேல்முருகன் ஆகியோர் முதல்-அமைச்சருக்கு அரோகரா, இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சருக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினார்கள்.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சியினர், இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து 2 பாடகர்களும் வருத்தமும், விளக்கமும் அளித்தனர். இந்த நிலையில் திருச்செந்தூர் கோவிலில் ஆன்மிக நிகழ்ச்சிகளில் தனிநபர் துதிப்பாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சியின்போது, ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த பக்தி இன்னிசை நிகழ்ச்சியில் பங்கேற்ற பாடகர்கள் எழுப்பிய சில கோஷ வாக்கியங்கள், பொது வெளியில் ஏற்படுத்திய விமர்சனங்கள், கோவிலின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துவதாக அமைந்துவிட்ட படியால்,

இனிவரும் காலங்களில், கோவிலால் ஒழுங்கு செய்யப்படும் ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி இன்னிசை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் கலைஞர்கள் இறைபக்தி வச னங்கள் மற்றும் இறைபக்திப் பாடல்களைத் தவிர ஆன்மிகத்துக் குத் தொடர்பில்லாத எந்தவொரு கோஷத்தையோ, தனி மனிதத் துதிபாடல்களையோ கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

SCROLL FOR NEXT