தமிழக செய்திகள்

தென்காசி பழைய குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை

நீர்வரத்து அதிகரிப்பால் பழைய குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.குறிப்பாக முக்கிய சுற்றுலாதளமான குற்றால அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று மாலையில் ஐந்தருவி பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் தொடர்ந்து மழை பெய்த தால் ஐந்தருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால் உடனடியாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இந்நிலையில் இன்று காலையில் மழைப்பொழிவு குறைந்து அருவிக்கு வரும் வெள்ளப்பெருக்கும் சற்று குறைந்தது.

குளிக்க தடை

இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் ஐந்தருவிக்கு அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்த நிலையில் காலை 9.30 மணியள வில் ஐந்தருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே, நீர்வரத்து அதிகரிப்பால் பழைய குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT