தமிழக செய்திகள்

27-ந்தேதி தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை

27-ந்தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தனுஷ்கோடி பகுதிக்கு செல்ல தடை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்,

வருகிற 27-ந்தேதி உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் முன்னிலையில் தனுஷ்கோடியில் கடல்கள் சங்க மிக்கும் இடத்தில் 1000 நடனக்கலைஞர்கள் மூலம் நாட்டியாஞ்சலி விழிப்புணர்வு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதனை முன்னிட்டு வருகிற 27-ந்தேதி காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை தனுஷ்கோடி பகுதிக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT