தமிழக செய்திகள்

நகராட்சி நிர்வாகத்துறையில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை

ஒருவர் அதிகபட்சம் 3 விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-

நகராட்சி நிர்வாகத்துறையில் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் அல்லது மே 31-ந் தேதிக்குள் 3 ஆண்டுகளை நிறைவு செய்பவர்கள் இடமாற்றத்துக்கு உட்படுத்தப்படுவார்கள். எந்த ஊழியரும் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்கப்படமாட்டார்.

3 ஆண்டுகள் பணி நிறைவு செய்து இடமாற்றத்துக்கு தகுதி பெற்றிருந்தாலும், ஓய்வு பெறுவதற்கு ஒரு ஆண்டு அல்லது அதற்கும் குறைவான காலமே இருந்தால், சில நிபந்தனைகளின் அடிப்படையில் அதே நிலையத்தில் வேறு பணியிடத்தில் தொடர அனுமதிக்கலாம். கலந்தாய்வில் இடமாற்றம் கேட்கும் ஒருவர் அதிகபட்சம் 3 விருப்ப இடங்களை தேர்வு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT