தமிழக செய்திகள்

டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டருக்குள் பார் அமைக்கலாம்: தமிழ்நாட்டில் புதிய விதிகள் அமல்

21 வயதிற்குட்பட்டோரை பாருக்குள் அனுமதிக்க கூடாது, அவர்களை பணியிலும் அமர்த்த கூடாது

தமிழகத்தில் டாஸ்மாக் பார் அனுமதி கடந்த ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்தது. சட்டமன்ற தேர்தல் காரணமாக ஜூன் மாதம் வரை அனுமதி நீட்டிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தவெக அரசும் அக்டோபர் மாதம் வரை நீட்டித்த நிலையில், அதனை மேலும் இரண்டு மாதங்கள் நீட்டித்து, டிசம்பர் வரை பார்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பார்களுக்கான அனுமதி வழங்கும் விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. அதன்படி டெண்டர் மூலம் பார்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை ஒட்டியோ அல்லது டாஸ்மாக் கடையில் இருந்து 100 மீட்டர் தள்ளியோ பார் அமைந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. வளர்ச்சி, நகர திட்டமிடல் ஆணையங்களில் வணிகம் அல்லது தொழிற்சாலைகளுக்கு தூர கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மலைப் பகுதிகளில் ஒருங்கிணைந்து பழங்குடி மேம்பாட்டு திட்டங்களில் இந்த பார்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் பாரில் நிச்சயம் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாரும் 20 மீ தரைதள பரப்பை கொண்டிருக்க வேண்டும். குடிநீர், கைகழுவும் வசதி கட்டாயம் இருக்க வேண்டும். பார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். பார்களுக்குள் அமர்வதற்கு போதுமான மேஜை, நாற்காலிகள் அமைக்க வேண்டும்

மதுபானம் அருந்துவது தெரியாத வகையில் தடுப்புகள் அமைக்க வேண்டும். மது அருந்துவது உடல் நலத்துக்கு கேடு. பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர் என்கிற வாசகம் இருக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது. 21 வயதிற்குட்பட்டோரை பாருக்குள் அனுமதிக்க கூடாது, அவர்களை பணியிலும் அமர்த்த கூடாது. பார்களை கோட்ட ஆயத்தீர்வைக்கு குறைவான பதவிகளில் இருப்போர், மாவட்ட ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட வட்டாட்சியர் பதவிக்கு குறைவான பதவிகளில் இருப்போர் ஆய்வு செய்யலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT