தேனி,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழையால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்படும். நீர்வரத்து சீராக இருக்கும்போது தினமும் ஏராளமானோர் வந்து குளித்து மகிழ்கின்றனர்.
இந்த நிலையில், தற்போது கோடை காலம் என்பதாலும், மழை இல்லாத காரணத்தினாலும், அருவிக்கு நீர்வரத்து முற்றிலும் இல்லாத நிலை உள்ளது. அருவியில் தண்ணீர் வராததாலும், காட்டு விலங்குகள் அருவி பகுதிக்கு வருவதாலும், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.