தமிழக செய்திகள்

மணிமுத்தாறு அருவியில் 3-வது நாளாக குளிக்க தடை

மணிமுத்தாறு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

நெல்லை,

தென்மேற்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து, நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிமுத்தாறு அருவியில் தற்போது வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பாதுகாப்பு கருதி மணிமுத்தாறு அருவியில் குளிக்க 3-வது நாளாக வனத்துறையினர் தடைவிதித்தனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து மணிமுத்தாறு அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

SCROLL FOR NEXT