சென்னை,
கொரோனா தொற்று காரணமாக கல்லூரிகளில் வகுப்புகள், தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பி.எட், எம்.எட். படிப்புகளுக்கான தேர்வும் ஆன்லைனில் நடைபெற இருக்கிறது.
இதுதொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் எம்.கோவிந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 கல்வியாண்டு மாணவர்களுக்கான பி.எட், எம்.எட். படிப்பு ஜூன், ஜூலை தேர்வு வருகிற 28-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடக்க இருக்கிறது. இது தொடர்பான முழு தகவல்கள், தேர்வு அட்டவணைகள் ஆகியவை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது. அதில் சென்று மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.