தமிழக செய்திகள்

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்புஅரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு, சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.

ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு, சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் உஷாராணி தலைமை தாங்கினார். நிதி காப்பாளர் கவிதாமணி, தமிழ்நாடு வருவாய் துறை கிராம உதவியாளர் சங்க மாநில தலைவர் ராஜசேகர் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தில் ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் அரசு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT