தமிழக செய்திகள்

தமிழக மக்களுக்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை நல்வாழ்த்துகள் – நயினார் நாகேந்திரன்

ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் நிறைந்திட அன்னை பராசக்தியின் அருள் துணை நிற்கட்டும்.

சென்னை,

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்து

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அறிவையும் ஞானத்தையும் அருளும் அன்னை சரஸ்வதி தேவியைப் போற்றி வணங்கும் இந்த இனிய சரஸ்வதி பூஜை திருநாளில், அனைவரின் வாழ்விலும் கல்வி, அறிவு, ஆற்றல் மற்றும் வெற்றி பெருகிட எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளையும், நமது உழைப்பிற்குத் துணை நிற்கும் ஆயுதங்களையும் போற்றி வணங்கும் ஆயுத பூஜை திருநாளில், தொழில் வளம் பெருகி, உழைப்பிற்கேற்ற உயர்வும் வெற்றியும் அனைவருக்கும் கிடைக்கட்டும். ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சியும், அமைதியும், செழிப்பும் நிறைந்திட அன்னை பராசக்தியின் அருள் துணை நிற்கட்டும். அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT