தமிழக செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் - டிடிவி தினகரன் வாழ்த்து

பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் டிடிவி தினகரன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளபதிவில் தெரிவித்திருப்பதாவது;-

இந்திய தேசத்திலும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபன தினம் இன்று.

வளர்ச்சியடைந்த இந்தியா எனும் இலக்கை அடைய அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வரும் பாரதப் பிரதமர் நரேந்திரமோடிக்கும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாக்கும், பாஜகவின் தேசிய தலைவர் நிதின் நபினுக்கும் மற்றும் அக்கட்சியைச் சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.