கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

பவானி சாகர் அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு நாளை முதல் நீர் திறப்பு

பவானி சாகர் அணையிலிருந்து 135 நாட்களுக்கு நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

சென்னை,

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து இரண்டாம் போக பாசனத்திற்கு, நாளை முதல் நீர் திறந்துவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் 3-ந்தேதி வரை 135 நாட்களுக்கு நீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய்யின் உத்தரவிற்கிணங்க, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து 2026-2027ம் ஆண்டு இரண்டாம் போக பாசனத்திற்கு, காலிங்கராயன் வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்கள் பயன்பெறும் வகையில், 20.11.2026 முதல் 3.04.2027 வரை 135 நாட்களுக்கு, மொத்தம் 5,832 மில்லியன் கன அடிக்கு மிகாமல் நீர் திறந்துவிட அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள 15,743 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT