தமிழக செய்திகள்

திண்டுக்கல்லில் பைக்-அரசு பேருந்து மோதி விபத்து; வடமாநில இளைஞர்கள் 2 பேர் பலி

இந்த விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே திண்டுக்கல்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த சாலை விபத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். மேலக்கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே பைக்கில் சென்றபோது, அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா (22), தில்சூல் (21) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த அம்பாத்துரை காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி, சார்பு ஆய்வாளர் கிருஷ்ணவேணி உள்ளிட்ட போலீசார் இருவரின் உடல்களை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அரசு பேருந்து மோதி வடமாநிலத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.