தமிழக செய்திகள்

திண்டிவனம் அருகே பைக்-வேன் மோதி விபத்து; தந்தை-மகன் பலி!

தந்தை–மகன் இருவரும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே பெரியண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எத்திராஜ் (63) மற்றும் அவரது மகன் செல்வநம்பி (48) ஆகியோர் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பெரியண்டப்பட்டு கிராமத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த வேன் ஒன்று, அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில், இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மயிலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் தந்தை–மகன் இருவரும் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.