சி.வி.சண்முகம் 
தமிழக செய்திகள்

பாஜகவும், காங்கிரசும் ஒன்று தான்; இருவருக்கும் ஒரே ஜீன் தான் - சி.வி.சண்முகம் காட்டம்

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படிதான் நீட் தேர்வை நடத்துகிறோம் என்று பாஜக உறுப்பினர்கள் கூறுகின்றனர் என்று சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

சென்னை,

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் மாறி மாறி விவாதித்து அரசியல் செய்துகொண்டிருந்த போது, அவையில் பேசிய சி.வி.சண்முகம் இரு கட்சிகளையும் ஒரே ஜீன் தான் என்று கடுமையாக விமர்சித்தார்.

நீட் விவகாரம்

தமிழக சட்டசபையில் இன்றைய மானியக் கோரிக்கை விவாதத்தின்போது நீட் விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட் ‘2011-ல் காங்கிரஸ் ஆட்சியில் எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு வேண்டாமோ அந்தந்த மாநிலங்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டது என்று கூறினார்.

விலக்கு கொடுக்கப்பட்டது

தமிழக சட்டசபையில் இன்றைய மானியக் கோரிக்கை விவாதத்தின்போது நீட் விவகாரம் தொடர்பாக காரசார விவாதம் நடந்தது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட் ‘2011-ல் காங்கிரஸ் ஆட்சியில் எந்தெந்த மாநிலங்களில் நீட் தேர்வு வேண்டாமோ அந்தந்த மாநிலங்களுக்கு விலக்கு கொடுக்கப்பட்டது என்று கூறினார்.

சந்தோஷம்

இதற்கு பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன், இவ்வளவு ஆண்டுகளாக நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்தான் என்று இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் தற்பொழுது ஒப்புக்கொண்டீர்களே, அதுவரை சந்தோஷம்’ என்று கூறினார்.

விலக்கு அளிக்கலாம்

தொடர்ந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. தாரகை கத்பட், “மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை காங்கிரஸ் ஆட்சிதான் கொண்டு வந்தது. மற்ற திட்டங்களை திருத்தம் செய்வதுபோல் நீட்-க்கு சில திருத்தங்கள் மேற்கொண்டு விலக்கு அளிக்கலாம்” என்று கூறினார்.

ஒரே ஜீன்தான்

பின்னர் அதிமுக எம்.எல்.ஏ. சி.வி.சண்முகம் பேசியதவாது:- “நீட் தேர்வை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என்று காங்கிரசும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படிதான் நீட் தேர்வை நடத்துகிறோம் என்று பாஜக உறுப்பினர்கள் கூறுகின்றனர். காங்கிரசும் சரி, பாஜகவும் சரி வேறுவேறாக இருந்தாலும், அவர்கள் உடம்பில் ஓடுவது ஒரே ஜீன்தான்.

நீட் தேர்வை வைத்து அரசியல்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து அதை நீக்குவதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா?. மாணவர்கள் மீது உண்மையாக அக்கறை இருந்திருந்தால் நீட் தேர்வு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து நீட் தேர்வை ரத்து செய்யலாம்; ஆனால் இவர்கள் (பாஜக, காங்கிரஸ்) நீட் தேர்வை வைத்து அரசியல் செய்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.