தமிழக செய்திகள்

வெளியானது பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல்.. யார்..யாருக்கு எந்த தொகுதி..?

பா.ஜ.க. முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை.

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் நிறைவடைய சில தினங்களே உள்ள நிலையில், பா.ஜனதா வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் நீடித்து வந்தது. இதற்கிடையே டெல்லியில் இந்த பட்டியல் ஆழமாக பரிசீலிக்கப்பட்டு இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டதாக தெரிகிறது.

அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக, 27 தொகுதிகளில் களம் காண்கிறது. அதிமுக ஒதுக்கிய 27 தொகுதிகளில் சிலவற்றை பாஜக மாற்றிக் கோருவது, ஒரே தொகுதிக்கு பல முனைப் போட்டி நிலவுவது மற்றும் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையை தேர்தலில் போட்டியிட வைக்க மேலிடம் அழுத்தம் கொடுப்பது போன்ற காரணங்களால் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 27 பேர் கொண்ட பா.ஜ.க. வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில் பல நட்சத்திர வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதன்படி சாத்தூரில் நயினார் நாகேந்திரன், மயிலாப்பூரில் தமிழிசை, கோவை வடக்கில் வானதி சீனிவாசன், அவிநாசியில் எல்.முருகன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

முழு விவரம்:-