தமிழக செய்திகள்

முதல்-அமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகர் கைது

முதல்-அமைச்சர் குறித்து ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தினத்தந்தி

சென்னை,

சென்னை திருநின்றவூர் கொட்டம்மேடு பகுதியை சேர்ந்தவர் பூபதி(வயது32). இவர் பாஜக பிரமுகர் என்று கூறப்படுகின்றது. இவர் முதல்-அமைச்சர் மற்றும் பட்டியலின சமூகத்தினர் குறித்து ஆபாசமாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வலைதளங்களில் வேகமாக பரவியது.

இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், ஆவடியில் தலைமறைவாக இருந்த பூபதியை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?