சென்னை,
தமிழக பா.ஜனதா துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கார்த்திகை அன்று திருப்பரங்குன்றத்தில், இந்து சமய அறநிலையத் துறை, மதுரை மாவட்ட கலெக்டர் கண்கட்டி வித்தை நடத்தி, கடைசி வரை ஏமாற்றியது. அன்று மாலை 6 மணிக்கு கோர்ட்டு உத்தரவை காலில் போட்டு மிதித்துவிட்டு, தீபத்தூணில் தீபம் ஏற்றாமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை, முருக பக்தர்களை மோசடி செய்ததோடு - இந்து மக்களின் உணர்வுகளை ரணமாக்கியிருக்கிறது தமிழ்நாடு அரசு.
இந்து மக்களை ஏமாற்றிடும் முதல்-அமைச்சர் விஜய்யைக் கண்டித்து தமிழ் நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) தீப்பந்த போராட்டத்தை தமிழ் நாடு பா.ஜனதா நடத்த இருக்கிறது. காலை 10 மணிக்கே கரங்களில் தாமரைச் சின்னம் பொறித்து பா.ஜனதாவின் இருவண்ணக் கொடியை ஏந்தி, போர்ப் பரணிபாடி, புலிநிகர் இளைஞர்கள் அணிவகுத்திட அழைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.