தமிழக செய்திகள்

பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

தென்காசியில் பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், இதனை தடுக்க தவறியதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்தும் தென்காசி புதிய பஸ்நிலையம் அருகில் நேற்று மாலை பா.ஜனதா மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி அனிதா செந்தில்குமார் தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT