தமிழக செய்திகள்

பாஜக மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் தவெகவில் இணைந்தார்...!

தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தவெக ஆட்சி அமைத்துள்ளது.

சென்னை,

பாஜக மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் மாநில ஊடக பொறுப்பாளர் விஜயலட்சுமி அரவிந்த் தவெகவில் இணைந்தார்.

தமிழக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. முதல்-அமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார்.

தவெகவில் இணைவு

இதனிடையே, தேர்தலில் தவெக வெற்றிபெற்ற நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தொண்டர்கள் என பலரும் தவெகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், பாஜக மகளிரணி மாநில செயற்குழு உறுப்பினரும், அக்கட்சியின் மாநில ஊடக பொறுப்பாளருமான விஜயலட்சுமி அரவிந்த் பாஜகவில் இருந்து விலகி இன்று தவெகவில் இணைந்தார். தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என்.ஆனந்த் முன்னிலையில் விஜயலட்சுமி அரவிந்த் இன்று தவெகவில் இணைந்தார்.