குறிஞ்சி மலர்கள் 
தமிழக செய்திகள்

பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள்... ரசிக்கும் சுற்றுலா பயணிகள்..

கேரள மாநிலம் மூணார் போன்ற மலைப்பகுதிகளிலும் இந்த குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவது குறிப்பிடத்தக்கது.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மலைப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அரிய வகை ‘நீலக்குறிஞ்சி’ மலர்கள் பூத்துக் குலுங்கத் தொடங்கியுள்ளன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆவலுடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

மலைகளை ஆக்கிரமித்த நீலக் கம்பளம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மஞ்சூர், கிண்ணக்கொரை மற்றும் புலிச்சோலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில், நீலக்குறிஞ்சி மலர்கள் முழுமையாக பூத்து, ஒட்டுமொத்தப் பகுதியையும் ஊதா மற்றும் நீல நிறக் கம்பளம் போர்த்தியது போல மாற்றியுள்ளன.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி அக்டோபர் வரை நீடிக்கும் இந்த அரிய நிகழ்வைக் காண்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இந்த மலைப்பகுதிகளுக்கு படையெடுத்து வருகின்றனர். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் இந்த இயற்கையின் அதிசயத்தை அவர்கள் தங்களது கேமராக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். கேரள மாநிலம் மூணார் போன்ற மலைப்பகுதிகளிலும் இந்த குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT