திருவள்ளூர்,
சென்னையில் இருந்து வடக்கே சுமார் 60 கி.மீ. தொலைவில், பழவேற்காடு ஏரி அமைந்துள்ளது. இது இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய உப்புநீர் ஏரி ஆகும். இந்த ஏரி தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவின் சில பகுதிகளிலும் அமைந்திருப்பதால், இரு மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்களும் மீன்பிடி தொழிலுக்காக இந்த ஏரியை பயன்படுத்துகின்றனர்.
இதனிடையே, பழவேற்காடு ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி சுற்றுலா பயணிகளை படகு சவாரிக்கு அழைத்துச் சென்றதாக இருதரப்பு மீனவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து திருப்பாலைவனம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.