தமிழக செய்திகள்

பனியன் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து.. 9 பெண் தொழிலாளர்கள் மயக்கம்

நிறுவனத்தினுள் இருந்த அயர்னிங் பாய்லர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது.

திருப்பூர்,

பனியன் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்த சத்தத்தில் 9 பெண் தொழிலாளர்கள் மயக்கமடைந்தனர்.

9 பெண்கள் மயக்கம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் தனியார் பனியன் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வழக்கம் போல் வேலை செய்து வந்துள்ளனர். மதிய உணவு வேளையில் அனைவரும் உணவு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது நிறுவனத்தினுள் இருந்த அயர்னிங் பாய்லர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் 9 பெண் தொழிலாளர்கள் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தனர்.

இதனையடுத்து அங்கு வேலை செய்யும் சக பணியாளர்கள், மயக்கமடைந்த 9 பேரையும் மீட்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT