தமிழக செய்திகள்

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் பழுது: 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிப்பு

கொதிகலன் குழாய் மற்றும் டர்பைனில் ஏற்பட்ட பழுதால் மொத்தம் 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சேலம்,

சேலம் மாவட்டம், மேட்டூரில் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தலா, 210 மெகா வாட் திறனில் நான்கு அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒட்டுமொத்த மின் உற்பத்தித் திறன் 1,440 மெகாவாட் ஆகும்.

இந்த நிலையில் அனல் மின் நிலையத்தின் கொதிகலன் குழாய் மற்றும் டர்பைன் திடீரென பழுதடைந்தது. இதனால் மொத்தம் 810 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாய் மற்றும் டர்பைனில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.