சென்னை,
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல் அமைச்சர் கே பழனிசாமி இல்லத்திற்கு இன்று காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. காலை 6.50 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், வெடி குண்டு மிரட்டலை விடுத்தார்.
இதையடுத்து, முதல்வர் இல்லத்தில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, தொலைபேசியில் மிரட்டல் விடுத்த நபரை கண்டறிய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.