சென்னை,
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, சென்னை - திருச்செந்தூர் இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட வேண்டும் என பயணிகள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் பேரில் எழும்பூர்-திருச்செந்தூர் இடையே சிறப்பு ' ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06155), மறுநாள் அதிகாலை 3 மணிக்கு திருச்செந்தூர் சென்றடையும். மறுமார்க்கமாக, திருச்செந்தூரில் இருந்து வருகிற 30-ந்தேதி இரவு 11.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (06156) மறுநாள் காலை 11.30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.