சேலம்,
திருச்சியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி தமிழகத்தில் புதிய 5 ரெயில் சேவையை தொடங்கி வைத்தார். அதன்படி, போத்தனூர்- தன்பாத் இடையே அம்ரித் பாரத் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை இயக்கப்பட்டது. இந்த ரெயில் கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக இரவு 9.21 மணிக்கு சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
அப்போது அந்த ரெயிலுக்கு ரெயில்வே கோட்ட மேலாளர் பன்னாலால் தலைமையில் அதிகாரிகள், ஊழியர்கள் மலர் தூவி வரவேற்றனர். மேலும் இந்த ரெயிலில் சேலத்தில் இருந்து பயணிகள் பலர் ஏறினர். இதையடுத்து அந்த ரெயில் இரவு 9.26 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த ரெயில் ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, நெல்லூர் வழியாக தன்பாத் சென்றடைகிறது.