தமிழக செய்திகள்

தூத்துக்குடியில் தொழிலாளி வீடு மீது பாட்டில் குண்டு வீச்சு: வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் தீ பற்ற வைத்து தொழிலாளி ஒருவரின் வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

தூத்துக்குடி,

பாட்டில் குண்டு வீச்சு:

தூத்துக்குடி தாளமுத்துநகர் நேரு காலனி 1-வது தெருவை சேர்ந்த சண்முகம், தொழிலாளி. இவரது மனைவி மகராசி (வயது 53). இவரது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென தாங்கள் கொண்டு வந்த மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலில் தீ பற்ற வைத்து வீட்டின் மீது வீசிவிட்டு தப்பிச் சென்றனர்.

புகார்:

பாட்டில் குண்டு விழுந்து வெடித்த சத்தம் கேட்டு வெளியே வந்த மகராசி தீயை உடனடியாக அனைத்ததால் பாதிப்பு ஏதும் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து மகராசி போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சி பதிவுகளை கைப்பற்றி மண்ணெண்ணெய் பாட்டில் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.