தமிழக செய்திகள்

விஜய்யின் தொண்டர்கள் விரல்களை பூட்ஸ் காலால் நசுக்கிய பவுன்சர்

காரைக்குடியில் தவெக தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டத்தில் போட்டியிடும் த.வெ.க., வேட்பாளர்களை ஆதரித்து காரைக்குடியில் இன்று விஜய் பிரசாரம் செய்தார். இதற்காக, சென்னையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்தார். பிறகு அவர் மதுரையில் இருந்து காரைக்குடிக்கு பிரசார வாகனத்தில் சென்றார்.

இந்தநிலையில், காரைக்குடி பிரசாரத்திற்காக மதுரையிலிருந்து புறப்பட்ட தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தில் தொற்றிய தொண்டர்களின் விரல்களை, பூட்ஸ் காலால் பவுன்சர் ஒருவர் நசுக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னதாக தவெக தலைவர் விஜயின் பிரசார வாகனத்தை பைக்கில் பின்தொடர்ந்த இளைஞர்கள் விபத்தில் சிக்கும் நிகழ்வு மீண்டும் நடந்தேறியது.

மதுரையில் இருந்து காரைக்குடி நோக்கி விஜய் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நேரிட்டது. விஜயின் வாகனத்தை பின் தொடர வேண்டாம் என்றும் பிரசாரத்திற்கு கர்ப்பிணிகள், சிறுவர், சிறுமியரை அழைத்து வர வேண்டாம் என்று அக்கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது இருந்தாலும் கட்சியின் அறிவுறுத்தலை கேட்காமல் ரசிகர்கள், தொண்டர்கள் விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து செல்வதும், விபத்தில் சிக்குவதும் வாடிக்கையாகி விட்டது.