முசிறி, ஆக.28-
முசிறியை அடுத்த பெருமாள்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 49). இவரது மனைவி நாகலோககன்னி. தம்பதி இருவரும் வீட்டைபூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் வேலை முடிந்து நாகலோககன்னி வீட்டுக்கு வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்றுபார்த்தபோது, பீரோ திறந்து கிடந்தது. அதில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் நகை-பணத்தை திருடிச்சென்றுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.