கிருஷ்ணகிரி,
திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பாலத்தால் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குடுகணஹள்ளி அடுத்த சவுட்டஹள்ளி கிராமத்தில் கால்வாய் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதனை கடப்பதற்காக 2 ஊர் மக்களும் இணைந்து சுமார் ரூ. 8 லட்சம் செலவில் கால்வாயின் குறுக்கே தற்காலிக தரைப்பாலம் அமைத்துப் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அப்பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனால், கால்வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், தற்காலிக பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கிராம மக்கள் மட்டுமின்றி, 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் கிராமத்தை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்