தமிழக செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு அதிரடி சரிவு

முட்டைக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

நாமக்கல்,

நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்பட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இதில் 8 கோடி முட்டை கோழிகளும், கறிக்கோழிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த நிலையில், நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.116-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.16 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.100 ஆக குறைந்து உள்ளது. முட்டைக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT