தமிழக செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோவுக்கு ரூ.2 உயர்வு

முட்டை கொள்முதல் விலை 650 காசுகளாக உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.139-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர்.

எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.141 ஆக அதிக ரித்து உள்ளது. முட்டை கொள்முதல் விலை 650 காசுகளாக உள்ளதாகவும், அதன்விலையில் மாற்றம் இல்லை எனவும் பண்ணையாளர்கள் தெரி வித்தனர்.