தமிழக செய்திகள்

டெய்லர் வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகைகள் திருட்டு

கரூரில் டெய்லர் வீட்டின் பூட்டை உடைத்து 4½ பவுன் நகைகள் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நகைகள் திருட்டு

கரூர் வடக்கு காந்திகிராமம் முத்துநகரை சேர்ந்தவர் சாமியப்பன் (வயது 59). டெய்லர். இவர் சம்பவத்தன்று தனது மனைவியுடன் மகள் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாமியப்பன் வீட்டினுள் சென்று பார்த்தார். அப்போது வீட்டினுள் ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் வீட்டின் அலமாரியில் அவர் வைத்திருந்த 4 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

வலைவீச்சு

இதுகுறித்து சாமியப்பன் பசுபதிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிந்து, நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT