கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூர் கிராமத்தில் நடைபெற்ற ஆறாம் ஆண்டு எருது விடும் விழாவில் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த விழாவைக் காண பல்வேறு கிராமங்களில் இருந்து மக்கள் வருகை தந்தனர்.
வாடிவாசல் திறந்துவிடப்பட்டதும் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய 50 காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல் பரிசு பெற்ற காளைக்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து நடத்தப்பட்ட இந்த எருது விடும் விழாவில், நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.