தூத்துக்குடி,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து ஒன்று தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பேருந்து தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அந்தோணியார் கோவில் அருகே வந்தபோது, எதிர்திசையில் இருந்து வந்த ஆட்டோ மீது நேருக்கு நேராக மோதி விபத்து ஏற்பட்டது.
அந்த ஆட்டோ காயல்பட்டினத்தில் இருந்து பயணிகளுடன் வைப்பாறு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இந்த விபத்தில் ஆட்டோ மற்றும் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன. விபத்தில் ஆட்டோவில் இருந்த 3 பேர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தருவைகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.