தமிழக செய்திகள்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து: 2 பேர் உயிரிழப்பு

காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்,

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

முன்னதாக இன்று காலையில் சென்னையிலிருந்து மதுரை நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திண்டிவனத்திலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. நான்கு சாலை மேம்பாலத்தில் உள்ள மின்சார வாரிய (EB) அலுவலகம் அருகே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் திருப்பத்தூர் மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த பொன் பாலதுரை (52 வயது) மற்றும் திருவள்ளூர் மாவட்டம், மணலியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (32 வயது) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பேருந்து ஓட்டுநர் மற்றும் ஒரு பெண் பயணி உட்பட ஆறு பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT