தமிழக செய்திகள்

இடைத்தேர்தல்: தாராபுரத்தில் திமுக - தவெக போட்டி போட்டு பிரசாரம்

தாராபுரம் இடைத்தேர்தலில் 5 முனைப்போட்டி நிலவுகிறது.

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடை பெறுகிறது. இந்த தேர்தலில், த.வெ.க., அ.தி.மு.க., தி.மு.க., நாம் தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி என 5 முனைப்போட்டி நிலவுகிறது.

இதையடுத்து வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தவெ.க. சார்பில், அமைச் சர்களும், தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்களும் தாராபுரத்தில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடு பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தாராபுரம் இடைத்தேர்தலையொட்டி தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து, அமைச்சர்கள் அனந்த், பர்வேஸ் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் தாராபுரம் பகுதிகளில் சைக்கிளில் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இதைபோல திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் வாக்கு சேகரித்தனர்.

தாராபுரம் மார்க்கெட் ரோட்டில் உள்ள எல்லீஸ் மெமோரியல் தேவாலய வாசல் முன்பாக திமுக மற்றும் தவெக கட்சியினர் ஒரே நேரத்தில் போட்டி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திமுகவினரும், அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்டோர் தலைமையில் தவெகவினரும் போட்டி போட்டு துண்டு பிரசுரங்களை வழங்கி கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT