தமிழக செய்திகள்

இடைத்தேர்தல் வெற்றி: அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி கொண்டாடிய முதல்-அமைச்சர் விஜய்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சென்னை,

இடைத்தேர்தல் வெற்றியை அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதல்-அமைச்சர் விஜய் கொண்டாடியுள்ளார்.

இடைத்தேர்தல் வெற்றி

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.

இந்த நிலையில் இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் மரகதம் குமரவேல் 19,303 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இதேபோல், தாராபுரம் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் சத்யபாமா 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வெற்றி கொண்டாட்டம்

அ.தி.மு.க. கோட்டையாக இருந்த மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் இப்போது த.வெ.க. பேட்டையாக மாறிவிட்டது. தி.மு.க. 2-வது இடம் பிடித்த நிலையில், அ.தி.மு.க. 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் மற்றும் அருண்ராஜ் ஆகியோருடன் கொண்டாடியுள்ளார்.

கோப்புப்படம்

வைரல் சைகை

முதல்-அமைச்சர் விஜய் சட்டமன்ற கூட்டத்தொடரின்போது காட்டிய தனது வைரல் சைகையை மீண்டும் அமைச்சர்களுடன் இணைந்து காட்டி கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT