தமிழக செய்திகள்

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தவெகவில் இணைகிறார்கள்

திமுக-அதிமுக கூட்டணி என்பது இயற்கைக்கு மாறானது என்று இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.

சென்னை,

த.வெ.க.வில் இணையும் விழா

அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியில் இருந்து டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் த.வெ.க.வில் இன்று (வியாழக்கிழமை) இணைகிறார்கள்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட் சத்திர விடுதியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் காலை 10 மணியளவில் இணைப்பு விழா நடைபெறுகிறது. இதில் திருச்சியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.வளர்மதி, திருப்பூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன், முன் னாள் எம்.எல்.ஏ.க்கள் மான்ராஜ் (ஸ்ரீவில்லிபுத்தூர்),

15 ஆயிரம் நிர்வாகிகள்

எம்.ராம்கு மார் (கும்பகோணம்), ராஜவர்மன் (திருச்சுழி). சதன்பிரபாகர் (பரமக்குடி), திருஞானசம்பந்தம் (பேராவூரணி), மாவட்ட செய லாளர்கள் பி.கே.வைரமுத்து (புதுக்கோட்டை), இளம்பை தமிழ்செல்வன் (பெரம்பலூர், ஒரத்தநாடு மா.சேகர் (தஞ்சை), சீனிவாசன் (திருச்சி) உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், 208 ஒன்றிய செயலாளர்களும் த.வெ.க.வில் ஐக்கியமாகின்றனர். இதற்காக கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 பஸ்கள், 600 கார்கள் மூலம் 15 ஆயிரம் நிர்வாகிகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இயற்கைக்கு மாறானது

த.வெ.க.வில் இணைவது குறித்து இருவரும் கூட்டாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாங்கள் 2 பேரும் அ.தி.மு.க. என்ற இயக்கத்துக்கு எதிராக ஒருபோதும் இருந்தது கிடையாது. இந்த இயக்கத்துக்கு விசுவாசமாக இருந்தோம். பல்வேறு சோதனையான காலக்கட்டத்தில் வேதனையை தாங்கி கொண்டு இயக்கத்துக்கு உறுதுணையாக நின்றோம்.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினோம். ஆனால் அதை அவர் பொருட்படுத்தவில்லை. அவர், தி.மு.க.வின் ஆதரவோடு முதல்-அமைச்சராக முயற்சித்தார். தி.மு.க.-அ.தி.மு.க. கூட்டணி என்பது இயற்கைக்கு மாறானது மட்டுமின்றி எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தோற்றுவித்த நோக்கத்துக்கே எதிரானது.

எடப்பாடி பழனிசாமியின் நடவ டிக்கைகள், செயல்பாடுகளால் விரக்தி அடைந்துதான், மனமெல்லாம் தீராத வேதனையை சுமந்தபடி, கண்ணீரோடு அ.தி.மு.க.வில் இருந்து விலகும் முடிவை எடுத்தோம். இன்றைக்கு த.வெ.க.வில் இணைகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.