சென்னை,
திமுக ஆட்சியில் 5-வது ஆண்டின் இறுதி பட்ஜெட்டாக வருகிற 17-ம்தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ள நிலையில் அதன்பிறகு பொறுப்பேற்கும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.
அதன்படி, 2026-27ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் வருகிற 17-ம்தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி தருவது தொடர்பாக ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.